மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டியில் 7 ஊர் அம்மன் சப்பரத் திருவிழாவானது 2 ஆண்டு ஒருமுறை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது 6 பெண் குழந்தைகளுடன் கல்லுப்பட்டி பகுதிக்கு வந்த போது அந்த காலத்தில் கடும் வறட்சியும் கடுமையான பட்டினியும் மக்களை வாட்டி வந்த நிலையில் பசியோடு இருந்த மூதாட்டிக்கு உணவளித்ததாகவும் மக்களின் அன்பால் அந்த மூதாட்டி தங்களது 6 குழந்தைகளுடன் அம்மாவட்ட கிராமத்தில் தங்கி இருந்து வந்த நிலையில் அவர் வந்ததும் அப்பகுதியில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டு விவசாயம் செழித்துள்ளது. இதனால் கல்லுப்பட்டி உள்பட 7 கிராம மக்களும் அவர்களை தெய்வமாக பார்த்து அவர்கள் மறைவுக்கு பிந்தைய காலத்தில் அவர்களை அம்மனாக வழிபட தொடங்கினர்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழாவானது நடைபெறும் இந்த திருவிழாவில் 6 கிராமங்களில் சப்பரங்களில் வைத்து மக்கள் சுமந்து கிராமத்தை சுற்றி வருவர். அனைத்து சப்பரங்களும் அம்மாபட்டியிலிருந்து அம்மன் சிலைகளை வழிபட்டு அம்மன் சிலைகளை அவரவர் சப்பரங்களில் வைத்து சொந்த ஊருக்கு கொண்டு சென்று வழிபாடு நடத்திவிட்டு நாளை அம்மன் சிலைகளை ஆற்றில் கரைத்து விடுவர். இத்தகைய திருவிழாவை காண டி.கல்லுப்பட்டி மட்டுமல்லாது திருமங்கலம், மதுரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இத்திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் டிஎஸ்பி துர்கா தேவி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு ராணுவ பயிற்சி பள்ளி மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
The post டி.கல்லுப்பட்டியில் சப்பரத் திருவிழா கோலாகலம்: 7 ஊர்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு வழிபாடு appeared first on Dinakaran.