டி.என்.பி.எல்.: வெற்றியுடன் தொடங்கப்போவது யார்..? சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் இன்று மோதல்

1 day ago 6

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் கோவையில் இன்றிரவு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 

Read Entire Article