டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பந்துவீச்சு தேர்வு

1 week ago 2

நெல்லை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.

சுரேஷ்குமார் தலைமையிலான திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது. பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் வெளியேற வேண்டியதுதான்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Read Entire Article