
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த 28 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாள் மற்றும் 26-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.