டாக்டர் ராமதாஸ் எழுதிய'போர்கள் ஓய்வதில்லை' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது

4 weeks ago 7

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதிய 'போர்கள் ஓய்வதில்லை' என்ற தலைப்பிலான புத்தகத்தின் வெளியீட்டு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஓட்டலில் நடைபெற உள்ளது. புதிய அரசியல் பதிப்பகத்தின் வெளியீடான இந்த புத்தகத்தில், ராமதாஸ் நடத்திய போராட்டங்கள், சமூகத்திற்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை குறித்த 54 நிகழ்வுகள் விளக்கப்பட்டிருக்கின்றன.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதன் பங்கேற்று புத்தகத்தின் முதல் படியை வெளியிட, அதை வி.ஜி.பி. குழும நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக்கொள்கிறார்.

தொடர்ந்து ராமதாஸ் ஏற்புரை நிகழ்த்துகிறார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி உள்பட முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.

Read Entire Article