மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாய குழுவினரை அழைக்காமல் சம்மந்தமில்லாதவர்களை பாஜக-வினர் டெல்லிக்கு அழைத்து சென்றதாக போராட்ட குழு விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் அமைவதை எதிர்த்து விவசாயிகள் 65 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், பாஜக சார்பில் ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை டெல்லி அழைத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 4 பேரும், விவசாய சங்க பிரதிநிதிகள் 7 பேரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், டெல்லி சென்ற குழுவினர் டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இல்லை என்று அரிட்டாபட்டி விவசாய சங்க பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் யாரை அழைத்து சென்றாலும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தால் மகிழ்ச்சி தான் என்றும், இல்லாவிட்டால் தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
The post டங்ஸ்டன் விவகாரம்.. டெல்லிக்கு போராட்டத்திற்கு சம்பந்தமில்லாதவர்களை அழைத்துச் செல்வதா?: பாஜகவினரும் விவசாயிகள் எதிர்ப்பு appeared first on Dinakaran.