டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: முதல்வருக்கு கமல்ஹாசன் பாராட்டு

1 month ago 4

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதல்வரின் நிலைபாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைபாடு பாராட்டத்தக்கது. ‘நான் முதல்வராக இருக்கும்வரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது’ என்று முதல்வர் சட்டப்பேரவையில் பேசியிருப்பது மக்கள் மீதான அவரது அக்கறையையும் இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது. மக்கள் பிரச்சினையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதல்வரின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article