மதுரை : டங்க்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்று வருகிறது.இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தனர்.தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வாக்குறுதி அளித்தது போல டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுத்ததற்கு விவசாயிகள் நன்றிகளை தெரிவித்தனர்.
The post டங்க்ஸ்டன் திட்டம் ரத்து.. மாவட்ட ஆட்சியருக்கு இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்த விவசாயிகள்!! appeared first on Dinakaran.