ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

1 day ago 2

கோட்டா,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் உஜ்வால் மிஸ்ரா (வயது 18). ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள பயிற்சி நிலையத்தில் சேர்ந்து 2 ஆண்டுகளாக ஜே.இ.இ. தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார். நாளை (புதன்கிழமை) நடக்கவுள்ள ஜே.இ.இ. தேர்வை எழுத இருந்தநிலையில் கடும் மனஉளைச்சலுக்கு உஜ்வால் ஆளாகியுள்ளார்.

இந்தநிலையில் மாலை 6 மணியளவில் விடுதி அறையில் இருந்து உஜ்வால் மிஸ்ரா வெளியேறினார். கோட்டா ரெயில் நிலையம் நோக்கி சென்ற அவர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உஜ்வால் மிஸ்ராவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Read Entire Article