ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி அருகே பெரியார், பகத்சிங் பிறந்த நாள் மரக்கன்று நடும் விழா

2 months ago 17

ஜெயங்கொண்டம், செப். 30: தந்தை பெரியார், மாவீரன் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் பொது நல மன்றம் சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலை அருகே உள்ள பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில் மரக்கன்றுகள் நட்டு வைத்து இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து. செப்டம்பர் மாதம் முழுவதும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாச நகர் இந்திரா நகர் ஜோதிபுரம் டாக்டர் கருப்பையா நகர் போன்ற பகுதியில் 100 மரக் கன்றுகள் நடுதல் வழங்குதல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியில் பாரதிதாசன் பொது நல மன்ற தலைவர் .குமார், மன்ற செயலாளர் சக்கரவர்த்தி, மன்ற பொருளாளர் கலைவாணி, மன்ற கவுரவத் தலைவர் சக்தி வேல், மன்ற துணை தலைவர் பால முருகன் மற்றும் மன்ற நிர்வாகிகள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விற்பனைக்கு வந்த தென்னங்கீற்று துடைப்பம்
 பெரம்பலூர் நகராட்சியை பொறுத்த வரை 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49648 பேர்கள் வசிப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், 13 ஆண்டுகள் கடந்த நிலையில் பல்வேறு தொழில்கள் ரீதியாக, பணிகள் ரீதியாக, நகர வாழ்க்கையின் மீதுள்ள மோகத்தின் காரணமாக நகராட்சியில் குடியேறி யவர்களின் எண்ணிக்கை, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் எனக் கணக்கிட்டுப் பார்த்தால் ஏறக் குறைய 90 ஆயிரம் பேர் இங்கு வசிப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

The post ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி அருகே பெரியார், பகத்சிங் பிறந்த நாள் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Read Entire Article