ஜூலை 7 முதல் 21 வரை சட்டமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி சுற்றுப்பயணம்

5 hours ago 2

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற நோக்கத்துடன் 7.7.2025 முதல் 21.7.2025 வரை முதல் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணைப்படி சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதுதொடர்பாக, அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜூலை 7ம் தேதி (திங்கள்)-மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதி, 8ம் தேதி – கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, 10ம் தேதி – விழுப்புரம் விக்கிரவாண்டி திண்டிவனம், 11ம் தேதி-வானூர், மயிலம், செஞ்சி, 12ம் தேதி – கடலூர், பண்ருட்டி, நெய்வேலி,

14ம் தேதி – புவனகிரி, சிதம்பரம், 15ம் தேதி-சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை, 16ம் தேதி-நன்னிலம், திருவாரூர், கீழ்வேளூர், 17ம் தேதி-நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, 18ம் தேதி-மன்னார்குடி, திருவிடைமருதூர், கும்பகோணம், 19ம் தேதி – பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு, 21ம் தேதி – ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

The post ஜூலை 7 முதல் 21 வரை சட்டமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article