ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா நாளை மோதல்

1 week ago 1

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தையும், தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி நாளை பகல் 12 மணிக்கு கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article