ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு தமிழக துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

1 week ago 4

சென்னை,

2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "ஐ.சி.சி. ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! அவர்களின் குறிப்பிடத்தக்க கூட்டு முயற்சியும் மற்றும் விடாமுயற்சியும்தான் இந்த நம்பமுடியாத சாதனைக்கு வழிவகுத்தது.

குறிப்பாக தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் கமலினியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். இன்று வரலாற்றை உருவாக்கிய அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article