புதுடெல்லி,
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோ) மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்நிலையில், 2வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்திய அணி குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் மலேசியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு நிகி பிரசாத் கேப்டனாகவும், சானிகா சால்கே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ஜி கமலினி மற்றும் பவிகா அஹிரே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்: நிகி பிரசாத் (கேப்டன்), சானிகா சால்கே (துணை கேப்டன்), ஜி திரிஷா, கமலினி ஜி (விக்கெட் கீப்பர்), பவிகா அஹிரே (விக்கெட் கீப்பர்), ஈஸ்வரி அவசரே, மிதிலா வினோத், ஜோஷிதா வி ஜே, சோனம் யாதவ், பருணிகா சிசோடியா, கேசரி த்ரிதி, ஆயுஷி சுக்லா, ஆனந்திதா கிஷோர், எம்.டி.ஷப்னம், வைஷ்ணவி எஸ்.
ரிசர்வ் வீரர்கள்: நந்தனா எஸ், ஐரா ஜே, அனாதி டி