
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக 'தேவரா' படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் 'வார் 2' படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 20-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி, சமீபத்தில் பாலையா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த 'டாகு மகாராஜ்' படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, பிரசாந்த் நீல் படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.