![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/03/37259040-ru.webp)
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக தேவரா படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் வார் 2 படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை இந்த மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி பற்றிய முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தற்போது தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படத்தில் நடித்து வரும் ருக்மணி வசந்த், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.