மஸ்கட்,
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் சீனதைபேவை நேற்று எதிர்கொண்டது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய இந்தியா கோல் மழை பொழிந்தது. இறுதியில் இந்திய அணி 16-0 என்ற கோல் கணக்கில் சீனதைபேவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை இன்று சந்திக்கிறது.