ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆப்கானிஸ்தான் அணியில் கசன்பர் சேர்ப்பு

6 months ago 18

புலவாயோ,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நாளை புலவாயோவில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் அல்லா கசன்பர் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான ரஷித் கான் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியில் அல்லா கசன்பர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


SQUAD UPDATE!

AM Ghazanfar has been added to Afghanistan's squad for the two-match test series against Zimbabwe, with the first one being scheduled to begin tomorrow in Bulawayo. #AfghanAtalan | #ZIMvAFG | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/fR5KRHqeSS

— Afghanistan Cricket Board (@ACBofficials) December 25, 2024

Read Entire Article