ஜிம்பாப்வேயுடன் டெஸ்ட் போட்டி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

4 hours ago 3

நாட்டிங்காம்: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது. கடந்த 22ம் தேதி நடந்த முதல் நாள் போட்டியின் இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன் எடுத்தது. 2ம் நாளில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 565 ரன்னுடன் டிக்ளேர் செய்தது. அதையடுத்து, ஆடிய ஜிம்பாப்வே, 265 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின் ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை ஆடியது. ஆட்ட நேர முடிவில் ஜிம்பாப்வே, 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன் எடுத்தது. தொடர்ந்து, 3ம் நாளான நேற்று, 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், ஒரு இன்னிங்ஸ், 45 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி பெற்றது.

The post ஜிம்பாப்வேயுடன் டெஸ்ட் போட்டி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article