லண்டன்: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் ஜோர்டான் காக்ஸ் அணியில் இருந்து விலகி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அந்த அணி, வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை, 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர்களாக ஜோர்டான் காக்ஸ், சாம் குக் ஆகிய வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் சேர்த்திருந்தது. இருவரும் சிறப்பான பார்மில் உள்ளதால் ஜிம்பாப்வே அணியுடனான போட்டிக்கு முக்கிய பங்காற்றுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோர்டான் காக்ஸ் கூறியுள்ளார். இதனால், இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு நிலவியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு, பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்பட உள்ளார். தவிர, கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாம் குக், ஜேம்ஸ் ரெவ், பென் டக்கட், ஆலி போப் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
The post ஜிம்பாப்வேயுடன் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து வீரர் விலகல் appeared first on Dinakaran.