ஜார்ஜியா: ஜார்ஜியாவில் உள்ள இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்கி, 11 இந்தியர்கள் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்தனர். ஜார்ஜியாவில் குடாவிரி பகுதியில் உள்ள பனி பிரதேசத்தில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் கார்பன் மோனோ ஆக்சைடு வாயு கசிந்து விபத்து நிகழ்ந்துள்ளது. விஷவாயு தாக்கி உணவகத்தில் பணியாற்றி வந்த 11 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக பிலிசியில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜார்ஜியாவின் குடாரியில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இறந்த இந்தியர்கள் பற்றிய தகவல்களைப் பெற உள்ளூர் அதிகாரிகளுடன் பணி தொடர்கிறது. இயன்ற அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும்” என பணிக்குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்ததா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், படுக்கையறைக்கு அருகில் ஒரு மூடிய இடத்தில் மின்சார ஜெனரேட்டர் வைக்கப்பட்டு இருந்ததாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், கார்பன் மோனாக்சைடு வாயு வெளியாகி உயிரிழப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய தடயவியல் பரிசோதனையும் நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
The post ஜார்ஜியாவில் உள்ள இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்கி, 11 இந்தியர்கள் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.