ஜாமீனில் வந்த பைனான்ஸ் ஊழியர் வெட்டிக்கொலை: ஆரணியில் பரபரப்பு

4 hours ago 3

ஆரணி: ஜாமீனில் வந்த பைனான்ஸ் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் போலீசில் இன்று சரணடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆரணிபாளையம் சாந்தா தெருவைச் சேர்ந்தவர் கரிமா என்கிற விக்னேஷ் (26). ஆரணியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

விக்னேசும், ஆரணி பாளையம் தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டனும் நண்பர்கள். மணிகண்டன் மீது கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த மணிகண்டன், போலீசில் தன்னைக் காட்டிக் விக்னேஷ்தான் என நினைத்து தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்ேபாது விக்னேஷுடன் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4-11-2021 அன்று மணிகண்டன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்த விக்னேஷுக்கும், மணிகண்டனின் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மணிகண்டன் ெகாலை வழக்கு விசாரணை வரும் 27ம்தேதி கோர்ட்டில் நடக்க உள்ளது.

இந்நிலையில், மணிகண்டனின் ஆதரவாளர்களால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்த விக்னேஷ், மணிகண்டன் ஆதரவாளர்களுடன் சமரசம் பேச திட்டமிட்டார். நேற்றிரவு சுமார் 10 மணியளவில் ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் மணிகண்டனின் ஆதரவாளர்கள் சுமார் 5 பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதையறிந்த விக்னேஷ் தனது பைக்கில் அங்கு சென்று அவர்களிடம் சமரசம் பேசியுள்ளார். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. விக்னேஷ் அவர்களிடம் இருந்து தப்ப முயன்றார். ஆனால் அவர்கள் சுற்றிவளைத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் அதே இடத்தில் இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதனிடையே இன்று காலை விக்னேஷ் கொலை தொடர்பாக மணிகண்டனின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படும் தனபால் (25), தாமோதரன் (24), கமல் (34) ஆகிய 3 பேர் கண்ணமங்கலம் போலீசில் சரணடைந்தனர். இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இக்கொலை தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த கணேஷ், சந்தோஷ், தினேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். இக்கொலை சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜாமீனில் வந்த பைனான்ஸ் ஊழியர் வெட்டிக்கொலை: ஆரணியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article