ஜாபர் சாதிக் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

3 weeks ago 4

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் போதைப் பொருட்கள் மூலமாக விற்பனை செய்த பணத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்தது.

ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத் துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வேலவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாபர் சாதிக், அவரது மனைவி, சகோதரர் மற்றும் நடிகர் அமீர், ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post ஜாபர் சாதிக் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article