
மும்பை,
பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி. இவர் பாலிவுட் நடிகர் சன்னி தியோலை வைத்து 'ஜாத்' படத்தை இயக்கி உள்ளார். கோபிசந்த் பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர் , ஜெகபதி பாபு , ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெரின், ஜெகபதி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படம் கடந்த 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியானது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட 'ஜாத்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இப்படத்தின் 'ராமா ஸ்ரீராமா' என்ற பாடல் ராம நவமியை முன்னிட்டு இன்று வெளியாகி வைரலானது. இப்படம் 7 நாட்களில் ரூ.70 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற தேவாலய காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படக்குழுவினர் வேண்டுமென்றே மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் காட்சிகளை உருவாக்கி, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் புனித வெள்ளியை முன்னிட்டு வெளியிட்டுள்ளதாகவும் பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இயக்குநர் சந்த் மலினேனி, நடிகர்கள் சன்னி தியோல், ரன்தீப் ஹூடா, வினீத் குமார் சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.