ஜவுளி, இனிப்பு, பட்டாசு, தங்கம் உள்ளிட்ட பொருட்களின் தீபாவளி விற்பனை ரூ.60,000 கோடி: ஆன்லைன் வர்த்தகமும் களைகட்டியது

4 months ago 17

சென்னை / சிவகாசி: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதாக தெரியவந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலமாக இருந்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை என்பதால், தீபாவளி விற்பனை களைகட்டியது. சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, சேலம், நெல்லை, தஞ்சாவூர், நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விற்பனை அமோகமாக நடந்தது.

Read Entire Article