ஜல்லி எடுத்து செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

2 months ago 13

சூளகிரி, டிச.17: சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தனப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில், சிமெண்ட் ஜல்லி கலவைகள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் லாரிகளில், முறையாக மூடி எடுத்து செல்லப்படுவதில்லை. வழி நெடுகிலும் சாலையில் சிமெண்ட் கலவையை கொட்டியவாறு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விதிமுறை மீறி பாதுகாப்பின்றி ஜல்லிக்கலவையை எடுத்துச் செல்லும் லாரிகளின் உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஜல்லி எடுத்து செல்லும் லாரிகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article