ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி

2 months ago 11

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மஹோரின் கஞ்சோட் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று சாலையில் சறுக்கி, ஒரு மலையிலிருந்து உருண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் ஒரு சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்கள் மஹோர் தாலுகாவை சேர்ந்த 40 வயதான மன்சூர் அகமது (ஆசிரியர்), அவரது 10 வயது மகள் உல்பத் ஜான், 42 வயதான குலாம் மொஹி உத் தின் மற்றும் அவரது 28 வயது மகன் பஷீர் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article