
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தின. பின்னர், 3 நாட்கள் மோதலுக்குப்பின் ஒப்பந்த அடிப்படையில் 10ம் தேதி மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஜம்மு-காஷ்மீர் சென்றார். அவர் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் புனித்தலமான குருத்வாராவுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.