ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு

2 hours ago 4

ஸ்ரீநகர்,

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2-வது கட்டமாக 26 இடங்களுக்கு கடந்த 25-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 56 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.

இந்நிலையில் 3-வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதனிடையே ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின், முதல் முறையாக அங்கு தேர்தல் நடைபெறுவதால் நாடெங்கிலும் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக ஹிஸ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதால் முன்னாள் முதல்-மந்திரியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தி இன்று தனது பிரசார கூட்டத்தை ரத்து செய்திருந்தார். தனது கட்சி பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுடன் நிற்கிறது என்று அவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து களத்தில் நிற்கிறது. மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலகிறது.

மூன்று கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

Read Entire Article