
சென்னை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;
"ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தேசத்திற்கு நீங்கள் செய்யும் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.