ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை ராஜஸ்தான் பயணம்

5 months ago 50

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஜஸ்தான் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 3-ந்தேதி(நாளை) ராஜஸ்தானின் உதய்பூருக்கு செல்லும் அவர், அங்குள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து நாளை மறுநாள்(4-ந்தேதி) மவுண்ட் அபுவில் 'தூய்மையான, ஆரோக்கியமான சமூகத்திற்கான ஆன்மிகம்' என்ற கருப்பொருளில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். பின்னர் அதே நாளில், மங்கர் தாம் பகுதியில் ராஜஸ்தான் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article