திருவாரூர், பிப். 6: ஜனவரி மாத ஊதியத்தினை உடனடியாக வழங்கிட கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று சுகாதார துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜனவரி மாத ஊதியத்த்தின உடனடியாக வழங்கிட கோரி நேற்று சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனர் அலுவலகத்தில் சங்க பொறுப்பாளர்கான கலைசெல்வன், இமானுவேல், ரகுகுமார், வேதராஜ், செந்தில்குமார், குமார், சந்திரசேரன் மற்றும் தமிழரசன் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி பணிஅட்டவணையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்துள்ளனர்.
The post ஜனவரி மாத ஊதியம் வழங்கக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு: சுகாதாரதுறை இணை இயக்குனரிடம் வழங்கினர் appeared first on Dinakaran.