ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

4 months ago 16

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்கும். அந்த வகையில் தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த உரையை ஆளுநர் படிப்பார். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் ரவி தனது உரையை படிக்காமல் புறக்கணித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையென்றும், பெரியார் பெயரை புறக்கணித்தும் படித்தார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஆளுநர் முன்னிலையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தீர்மானமும் கொண்டுவந்தார். ஆளுநர் ரவியும் தேசிய கீதத்தை புறக்கணித்தும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில் இந்தாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையோடு சட்டப்பேரவை தொடங்க இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த இருப்பதாக கூறினார். மேலும் இந்தாண்டு ஆளுநர் உரையை முழுவதுமாக படிப்பார் என்று நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்ததான் அனுமதியே தவிர, சொந்த கருத்துகளை சொல்ல அனுமதி இல்லையென கூறினார். அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். சட்டப்பேரவைக்கும் இது பொருந்தும் என தெரிவித்தார். மேலும் இந்த ஆளுநர் உரை கூட்டமானது எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் கூறினார்.

The post ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article