ஜனநாயகத்துக்கு எதிரான அராஜக ஆட்சி நடக்கிறது: திருநாவுக்கரசர் பேச்சு

1 month ago 6

சென்னை: இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் சார்பில், மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இலக்கிய அணி சார்பில் கருத்தரங்கம் நடந்தது. இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமை வகித்தார்.

மூத்த தலைவர்கள் மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்னமூர்த்தி, முன்னிலை வகித்தனர். இதில், திருநாவுக்கரசர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கான சட்டங்களை கொண்டு வந்தவர் இந்திரா காந்தி. நாட்டில் அராஜக ஆட்சி ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சி நடக்கிறது. ராகுல், பிரியங்கா போராட்டம் வெல்லட்டும்.

The post ஜனநாயகத்துக்கு எதிரான அராஜக ஆட்சி நடக்கிறது: திருநாவுக்கரசர் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article