
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.
கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது.
இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இதே போன்று வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம் நிறுவனம் ரூ.78 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. அந்த வகையில், பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய தொகைக்கு ஜன நாயகன் படத்தின் உரிமையை கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.