சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு சார்பில் எதிர்வரும் ஜனவரி 29ம் தேதி மெரினா கடற்கரை சாலையில் மாலை 5:00 மணிக்கு “சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இணையத்திலுள்ள சைபர் குற்றங்களின் தடுப்பு பற்றியும் மற்றும் அதனை சமூகத்தில் பாதுகாப்பான ஆன்லைன் செயல்பாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நடைபயணமானது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துவகை நபர்களையும் சேர்த்து சைபர் குற்றத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கும்.
இந்த நிகழ்ச்சி, சைபர் குற்றங்களை குறித்து மக்களை விழிப்புணர்வு படுத்தி, தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் மற்றும் ஆன்லைன் தனியுரிமையை பராமரிப்பதில் உதவும் வழிகாட்டல்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இணையவழி குற்றப்பிரிவு, அனைவருக்கும் பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்க ஆர்வமாக செயல்படுகிறது மற்றும் இன்றைய இணைய உலகில் எச்சரிக்கையாகவும், அறிவுணர்வுடன் இருக்கவேண்டிய அவசியத்தை முக்கியமாக நினைவூட்டுகிறது. பொதுமக்கள் இந்த முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்க அழைக்கின்றோம். அனைத்து பங்கேற்பாளர்களுக்கு நடைபயணம் முடித்தவுடன், பங்கேற்புக்கான அடையாளமாக “பிளாக்செயின் மூலம் இயக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழை” பெறுவார்கள்.
நிகழ்ச்சிக்கு https://1930walkathon.in என்ற லிங் மூலம் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post ஜன.29ல் மெரினா கடற்கரை சாலையில் சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம் appeared first on Dinakaran.