சோழசிராமணியில் முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

2 hours ago 3

பரமத்திவேலூர், மார்ச் 19: கபிலர்மலை ஒன்றிய திமுக சார்பில், முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சோழசிராமணியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். முன்னதாக ஒன்றிய துணைச் செயலாளர் வளர்மதி சுப்பிரமணியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா கலந்து கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முதல்வரின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். நிகழ்ச்சியில், தளபதி சுப்பிரமணியன், பாண்டமங்கலம் பேரூர் செயலாளர் முருகவேல் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சோழசிராமணியில் முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article