விருதுநகர், ஜூலை 8: அனைத்து வீடுகளிலும் சூரிய ஒளி தகடுகள் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்களின் வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகள் திட்டத்தால் பயன்பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் விருதுநகர் அம்பாள் நாளை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மக்கள் வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் நிறுவி மின்உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை, வங்கி கடன் உதவி, அரசு மானியம் உள்ளிட்டவை முகாமில் விளக்கப்படும். பொது மக்கள் முகாமில் பங்கேற்று சூரிய மின் உற்பத்தி திட்டப்பலன்களை பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
The post சோலார் தகடுகள் நிறுவ நாளை சிறப்பு முகாம் appeared first on Dinakaran.