சொந்த ஊரான தசவாராவில் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

6 hours ago 2

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று காலமான பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவியின் உடல், அவரது சொந்த ஊரான தசவார கிராமத்தில் அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் சித்தராமையா உள்பட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் நடிகை பி.சரோஜாதேவி, நேற்று காலை 9 மணியளவில் காலமானார். அவரது உடல் பெங்களூரு மல்லேஷ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரவது உடலுக்கு நடிகர்கள் சிவராஜ்குமார், பிரகாஷ்ராஜ், உபேந்திரா, சாதுகோகிலா, நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜக்கேஷ், இயக்குனர் யோகராஜ்பட், நடிகைகள் காஞ்சனா, தாரா அனுராதா, மாலா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

இந்நிலையில் வெளி மாவட்ட சுற்றுபயணத்தில் இருந்த முதல்வர் சித்தராமையா, நேற்று இரவு பெங்களூரு திரும்பினார். நேற்று காலை மல்லேஷ்வரத்தில் உள்ள நடிகை சரோஜாதேவி வீட்டிற்கு சென்ற முதல்வர் சித்தராமையா, அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். மல்லேஷ்வரத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நேற்று அதிகாலை முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சரோஜாதேவியின் உடல் ஊர்வலமாக பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னபட்டன தாலுகா, தசவார கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கிராமத்தில் உள்ள குடும்ப பண்ணை தோட்டத்தில் சரோஜாதேவியின் தாய் ருத்ரம்மா சமாதி அருகில் ஒக்கலிக வகுப்பினரின் வழக்கப்படி சம்பரதாய பூஜைகள் செய்யப்பட்டது.

நடிகை சரோஜாதேவியின் நடிப்பை பாராட்டி ஓன்றிய அரசின் சார்பில் பத்ம மற்றும் பத்மபூஷண் விருதும், கர்நாடக மாநில அரசின் சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிவுள்ளதால், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யும்படி பெங்களூரு தெற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டதை தொடர்ந்து, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

The post சொந்த ஊரான தசவாராவில் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article