சையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகா வெற்றி

7 months ago 21

இந்தூர்,

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி கார்நாடகா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய 90 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி பந்தில் குர்ஜப்னீத் சிங் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 24 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்துவீசிய கர்நாடகா தரப்பில் வாசுகி கவுஷிக் மற்றும் மனோஜ் பந்தகே தலா 3 விக்கெட்டுகளும், வியாதர் பட்டில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கர்நாடகா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன மயங்க் அகர்வால் - மனீஷ் பாண்டே அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இதனால் கர்நாடகா வெறும் 11. 3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 42 ரன்களிலும், மயங்க் அகர்வால் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மனீஷ் பாண்டே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

5 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழக அணி கண்ட 3-வது தோல்வி இதுவாகும்.

Read Entire Article