இந்தூர்,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகள் தங்களுக்குள் 'நாக்-அவுட்' சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் காலிறுதியை எட்டும்.
இந்த தொடரில் குரூப் பி-யில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, தனது 6வது லீக் ஆட்டத்தில் இன்று சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 235 ரன்கள் குவித்தது. சவுராஷ்டிரா தரப்பில் ருசித் அஹிர் 56 ரன் எடுத்தார். தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெடுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 236 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 58 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்றது. தமிழகம் தரப்பில் பூபதி குமார் 65 ரன் எடுத்தார். சவுராஷ்டிரா தரப்பில் சிராக் ஜானி 3 விக்கெ வீழ்த்தினார். இந்த தொடரில் தமிழக அணி தொடர்ச்சியாக சந்தித்த 4வது தோல்வி இதுவாகும்.