சைக்கிள் திருடும் வீடியோ வைரல்

4 weeks ago 7

 

திருப்பூர்,டிச.16: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிஜு (23). திருப்பூர் எஸ்.ஏ.பி பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறார். பிஜு கொடிக்கம்பம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் அயனிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தான் பணியாற்றும் பின்னலாடை நிறுவனத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் உணவு இடைவேளையின்போது வெளியே வந்து பார்த்தபோது சைக்கிளை காணவில்லை.

அதனால் அதிர்ச்சி அடைந்த பிஜு உடனடியாக பின்னலாடை நிறுவனத்தின் கண்காணிப்பு கேமரா காட்சியை பார்த்ததில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தன் சைக்கிளை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இந்த வீடியோவில் அந்த மர்ம நபர் சைக்கிளை கூட பிடிக்க முடியாமல் மதுபோதையில் கீழே விழுந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. தற்போது திருட்டு தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post சைக்கிள் திருடும் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article