ஈரோடு, ஜன. 17: ஈரோடு அடுத்த சித்தோடு கன்னிமார் காடு பகுதியில் சிலர் சேவல் சண்டை நடத்தி, ஜெயிக்குது, தோற்குது என பணம் வைத்து விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், சித்தோடு போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று சேவல் சண்டை நடத்தி வந்த பவானி காடையம்பட்டியை சேர்ந்த நல்லசாமி (52), நாமக்கல் மாவட்டம் குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (32), எலவமலையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (46) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.300 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஆப்பக்கூடல் நாடார் காலனி பகுதியில் சேவல் சண்டை நடத்தி வந்ததாக சத்தியமங்கலத்தை சேர்ந்த சின்னசாமி (45), அரியப்பம்பாளையத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (33), அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (28) ஆகிய 3 பேரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 சேவல், ரூ.1,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அந்தியூர் கரை மேட்டில் சேவல் சண்டை நடத்திய செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த கோபால் (21), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (28), கோபியை சேர்ந்த குணசேகரன் (26) ஆகிய 3 பேரையும் அந்தியூர் போலீசார் கைது செய்தனர். அம்மாபேட்டை குறிச்சி பகுதியில் முகாசிபுதூரை சேர்ந்த சின்ராஜ் (52), ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த அப்துல் கரீம் (30), செம்பட்டாம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி (51) ஆகிய 3 பேரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 சேவல், ரூ.17,930 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
The post சேவல் சண்டை நடத்திய 12 பேர் கைது appeared first on Dinakaran.