சேலம் போலீஸ் ஸ்டேஷனில் சீமான் மீது வழக்கு பதிவு

18 hours ago 1

சேலம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக வந்த புகாரின்பேரில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே போல சேலத்திலும் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் சுமதி(53). இவர் மக்கள் சமூகநீதிப்பேரவையின் மாநில பொருளாளராக இருக்கிறார். இவர், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், தந்தை பெரியாரை அவதூறாக பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். அந்தமனு மீது ரசீது கொடுத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் போலீஸ் ஸ்டேஷனில் சீமான் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article