சேலம் அருகே அக்காள், தம்பி கழுத்தறுத்து கொலை... சொத்து தகராறில் உறவினர் வெறிச்செயல்..

3 months ago 22
சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டியில், பிளஸ் டூ மாணவியான நவீனாவையும், அவரது தம்பி சுகன் என்பவரையும் அரிவாளால் கழுத்தை அறுத்து படுகொலை செய்ததாக கூறப்படும் அவர்களது உறவினரை  போலீசார் தேடிவருகின்றனர். விவசாயியான ராஜா என்பவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்துவரும் அவரது உறவினரான தனசேகருக்கும் சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தோட்டத்தில் அரளிப்பூ பறித்துக்கொண்டிருந்த ராஜாவின் 17 வயது மகளையும், 15 வயது மகனையும் தனசேகர் அரிவாளால் சராமாரியாக வெட்டி கொன்றுவிட்டு, தடுக்க வந்த ராஜாவையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். 
Read Entire Article