சேலம்: சேலம் அருகே எறும்புத்தின்னியை பல லட்சம் ரூபாய்க்கு விற்க முயற்சித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் உள்ள எறும்புத்தின்னியை பிடித்து மருத்துவகுணம் கொண்டது என கூறி ஒரு கும்பல் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக வனச்சரகர் தங்கராசுவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து தனிப்படை குழு அமைத்து கும்பலை தேடி வந்தனர். அப்போது ஏற்காடு நல்லூர் கிராமத்தை சேர்ந்த குழந்தை, பழனி, சத்யராஜ் ஆகிய 3 பேரும் எறும்புத்தின்னியை கோவையில் வசிக்கும் மூர்த்தி என்பவருக்கு ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.
இந்த 4 போரையும் வனச்சரகர் தங்கராசு தலைமையிலான குழுவினர் கைது செய்து எறும்புத்தின்னியை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து பரூரை சேர்ந்த மணிவாசகன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு பேரையும் வனத்துறையினர் பிடித்தனர். கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post சேலத்தில் எறும்புத்தின்னியை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயற்சி: மோசடி கும்பிட்ட சேர்ந்த 6 பேர் கைது appeared first on Dinakaran.