சேப்பமட்டை சுருள் கறி

1 month ago 7

தேவையானவை:

சேப்பமட்டை (இலை) – 4,
கடலைப்பருப்பு – 1 கப்,
காய்ந்தமிளகாய் – 3,
பெருங்காயம் – 1 துண்டு,
உப்பு – தேவையான அளவு,
கெட்டியாக புளி கரைத்தது – 1 டீஸ்பூன்.

தாளிக்க:

சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – ½ டீஸ்பூன்.

செய்முறை:

கடலைப்பருப்பை 2 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். உப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். சேம்பு இலையை கழுவி வைக்கவும். அரைத்த கலவையில் புளி நீர் சேர்த்து நீர் ஊற்றி அடைமாவு போல் செய்து லேசாக இலையின் பின்புறம் தடவவும். சமமாக இலை முழுவதும் தடவியதும் மற்றொரு இலையை அதன் மீது வைத்து இரண்டையும் அழுத்தி சுருட்டவும். அதை அப்படியே நீட்டுவாக்கில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வெளியில் எடுத்து ஆறியதும் ஒரு அங்குல துண்டுகளாக வெட்டி கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு சேர்த்து வெடித்ததும் ஆவியில் வெந்த இலை சுருள்களை சேர்த்து மிதமான தீயில் சிறிது பிரட்டவும். சூப்பரான சேப்பமட்டை கறி தயார்.

The post சேப்பமட்டை சுருள் கறி appeared first on Dinakaran.

Read Entire Article