செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் தனுஷ்

1 month ago 5

சென்னை,

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் கடைசியாக நானே வருவேன் படம் வெளியானது. படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். 'பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல்' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்தநிலையில், செல்வராகவன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். அப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷின் இசை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வராகவன் கடைசியாக நடிகர் தனுஷை வைத்து நானே வருவன் என்ற படத்தை 2022ல் இயக்கினார்.

இயக்குநராக செல்வராகவன் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த நிலையில், செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் செல்வராகவனின் சகோதரருமான தனுஷ் வெளியிடுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

It's none other than our very own @dhanushkraja who will be launching the first look of @selvaraghavan's next ❤️Coming up today at 6.30PM! @gvprakash @gdinesh111 pic.twitter.com/JnXMDbDoVv

— Parallel Universe Pictures (@ParallelUniPic) December 13, 2024
Read Entire Article