செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை

1 month ago 10

பூந்தமல்லி: அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்டார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரந்தீர் பிரசாத் (40), வெல்டர். இவர் கடந்த சில வருடங்களாக திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சரிதா தேவி (36), இவர்களுக்கு சாந்தகுமாரி (18) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

வேலை விஷயமாக ரந்தீர் பிரசாத் வெளியூர் சென்ற நிலையில் சாந்தகுமாரி 12ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில தினங்களாக சாந்தகுமாரி செல்போனை அதிக நேரம் பார்த்துக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த அவரது தாய் சரிதாதேவி, மகளை கண்டித்துள்ளார்‌. மேலும் செல்போனையும் வாங்கி வைத்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சாந்தகுமாரி நேற்று முன்தினம் அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை‌.

இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது, சாந்தகுமாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்துபோன சார்ந்த குமாரி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article