செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றம் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்: தமிழ்நாடு அரசு விளக்கம்

4 months ago 12

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து கடந்த 13ம் தேதி காலை 10.30 மணி அளவில் வினாடிக்கு 4,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு 6,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனூர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதிலம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், புழல் ஏரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனம நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மிகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து 13ம் தேதி காலை 9 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு 1,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

எனவே, புழல் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றம் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்: தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article